திஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.

 

திஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ.

 

 

திஹாரி கொழும்பு – கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு 1:15 மணியலில் தீ பரவியுள்ளது.

குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனினும், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீக்கிரையான வர்த்தக நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உடதலவின்னை செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *