மாவெனல்ல சகோதரர் ஒருவரின் ஆதங்கம் …

மாவெனல்ல சகோதரர் ஒருவரின் ஆதங்கம் …

மாவெனல்ல சகோதரர் ஒருவரின் ஆதங்கம் , 

. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கவனத்துக்கு இந்த செய்தியை வௌியிடுகின்றேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, நான் மாவனல்ல கார்கில்ஸ் புட்சிடியில் சாமான்களை வாங்குவது வழக்கம். அதற்கு பிரதான காரணம் பொருட்கள் தரமாக இருப்பது மட்டுமன்றி அவை துப்பரவாகவும் கிடைக்கின்றன.அத்துடன் பெரும்பாலும் எமக்கு அவசியமான அனைத்துப்பொருட்களையும் சிரமம் இன்றி ஒரே இடத்தில் வாங்க முடியும் என்பதும் பிரதான காரணம்.ஆனால் கடந்த ஒரு வருடகாலமாக குறிப்பாக புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டபின் நான் அவதானித்த மிகமுக்கியமான ஒரு வித்தியாசம். முஸ்லிம்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் படிப்படியாக மார்க்கட்டில் இருந்து ஒதுக்கியமை. பெரும்பாலும் நாம் பைரஹா சிக்கன், கிறிஸ்போ உற்பட பலவகை பாற் பொருட்கள், ஏனைய முஸ்லிம்களால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகள் இப்போது முற்றாக அங்கிருந்து அகற்றப்பட்டு விரும்பினால் நீங்கள் கொள்வனவு செய்யலாம். இவைதான் எம்மிடம் உள்ளவை என்ற ஒரு மனப்பாங்குடன் அங்கே விற்பனை நடைபெறுகிறது. எனவே இனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு சமூகத்தை ஒதுக்கும் அதன் பொருளாதாரத்தை நசுக்கும் ஒரு மார்க்கட்டில் குறிப்பாக அல்லாஹ்வுடைய பெயர் முற்றிலும் அகற்றப்பட்டு முஸ்லிம்களை புறக்கணிக்கும் ஒரு இடத்தில்் பொருட்களை வாங்கலாமா என்பதை சிந்தித்துச் செயலாற்றும் காலம் வந்து விட்டது. எனவே சற்று சிந்தனையுடன் செயல்படுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *