மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு…

மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு…

மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு.

தற்போது நிலவும் வெப்பமயமான காலநிலை காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கத்துறை அமைச்சர் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி மாத்திரம் சுமார் 2ஆயிரத்து 500 மெகாவோட் மின்சாரத்தின் தேவை ஏற்பட்டுள்ளதுடன், அது ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், வரட்சியான காலநிலை காரணமாக மகாவலி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்துவருகின்றது.
ரன்டெம்பே நீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் நூற்றுக்கு ஒரு சதவீதத்தை விட குறைவடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டலம, கலாவெவ, ராஜாங்கனை,நுவரவெவ, திஸாவெவ, கிரிதலே, கவுடுல்ல கொத்மலே மற்றும் சமனலவெவ போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், விக்டோரியா, போவதென்ன, மொகஹகந்த, தம்புலுவௌ, பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் சிலவற்றில் குறிப்பிடத்தக்களவு நீர்மட்டம் சேமிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக மகாவலி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது நிலவும் மழையற்ற காலநிலையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

உடதலவின்னை செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *